Competition in this pair is now closed. Discussion and feedback about the competition in this language pair may now be provided by visiting the "Discussion & feedback" page for this pair. Entries may also be individually discussed by clicking the "Discuss" link next to any listed entry. Source text in English A theme of the age, at least in the developed world, is that people crave silence and can find none. The roar of traffic, the ceaseless beep of phones, digital announcements in buses and trains, TV sets blaring even in empty offices, are an endless battery and distraction. The human race is exhausting itself with noise and longs for its opposite—whether in the wilds, on the wide ocean or in some retreat dedicated to stillness and concentration. Alain Corbin, a history professor, writes from his refuge in the Sorbonne, and Erling Kagge, a Norwegian explorer, from his memories of the wastes of Antarctica, where both have tried to escape.
And yet, as Mr Corbin points out in "A History of Silence", there is probably no more noise than there used to be. Before pneumatic tyres, city streets were full of the deafening clang of metal-rimmed wheels and horseshoes on stone. Before voluntary isolation on mobile phones, buses and trains rang with conversation. Newspaper-sellers did not leave their wares in a mute pile, but advertised them at top volume, as did vendors of cherries, violets and fresh mackerel. The theatre and the opera were a chaos of huzzahs and barracking. Even in the countryside, peasants sang as they drudged. They don’t sing now.
What has changed is not so much the level of noise, which previous centuries also complained about, but the level of distraction, which occupies the space that silence might invade. There looms another paradox, because when it does invade—in the depths of a pine forest, in the naked desert, in a suddenly vacated room—it often proves unnerving rather than welcome. Dread creeps in; the ear instinctively fastens on anything, whether fire-hiss or bird call or susurrus of leaves, that will save it from this unknown emptiness. People want silence, but not that much. | Winning entries could not be determined in this language pair.There were 5 entries submitted in this pair during the submission phase. Not enough votes were submitted by peers for a winning entry to be determined.
Competition in this pair is now closed. | இந்த நவீன உலகில், முக்கியமாகப் பேசப்பட வேண்டிய தலைப்பு, ’மக்கள் அமைதிக்காக ஏங்குகிறார்கள், ஆனால், அது யாருக்கும் கிடைப்பதில்லை’ என்பதாகும். போக்குவரத்தின் சலசலப்பு, தொலைபேசிகளின் இடைவிடாத அலறல்கள், பேருந்துகள் மற்றும் இரயில்களில் மாறிமாறி வந்துகொண்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்புகள், ஆளில்லாத அலுவலகங்களிலும் கூட இரைச்சலை இடைவிடாது கக்கிக்கொண்டே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆகியவை முடிவற்ற இயந்திரங்களாகி, மனித அமைதியைக் குலைத்துவிடுகின்றன. ஆக, நவீன உலகில் வாழும் மனித இனம் சப்த இரைச்சல்களில் அதீதமாகச் சோர்வடைந்து போய், அதற்கு எதிரான திசைகளில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. மனிதர்கள் இப்போது அடர்ந்த காடுகளுக்கும், பரந்த கடல் பகுதிகளுக்கும், அமைதிக்கும், தியானத்துக்கும் அர்ப்பணிக்கப்பட்ட புத்தாக்க மையங்களுக்கு ஓட ஆரம்பித்துள்ளனர். நவீன உலகின் இரைச்சலில் இருந்து தப்பிப்பதற்காகவே, வரலாற்றுப் பேராசிரியரான அலேய்ன் கார்பின், சோர்போனில் உள்ள அமைதி முகாமில் தங்கியிருப்பதாகவும், நார்வேஜியன் கடல் ஆராய்ச்சியாளரான எர்லிங் கேக்கே, அண்டார்டிக்காவின் பரந்த கடல் பகுதியில் அலைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதாகவும் எழுதுகிறார்கள். மேலும், தனது "அமைதியின் வரலாறு" என்ற நூலில், தாங்கள் முன்பு அனுபவித்த சாலை இரைச்சல் இப்போது சற்று குறைந்துள்ளதாக எழுதுகிறார் கார்பின். காற்று நிரப்பப்பட்ட டயர்கள் வருவதற்கு முன்பு, நகரத் தெருக்களின் சாலைகளில் உலோக ரிம்களைக் கொண்ட சக்கரங்களும், கற்சாலைகளின் ஓடும் குதிரை வண்டிகளிலிருந்து வரும் குதிரைகளின் கடுமையான குளம்பொலியும் காதுகளைச் செவிடாக்கிக் கொண்டிருந்ததாக அவர் எழுதுகிறார். பஸ் பயணங்களின்போது இப்போது மொபைல் ஃபோன்களில் தஞ்சமடைந்து கிடக்கும் மனிதர்கள், முன்பு பேசிப் பேசியே இரைச்சல் போட்டுக்கொண்டிருந்தனர். முன்பெல்லாம், வீடுகளில் செய்தித்தாள் போடுபவர்கள் அவற்றை அதற்கான பெட்டியில் அமைதியாகப் போட்டுச் செல்வதில்லை, பழங்களையும், பூக்களையும் மீன்களையும் விற்றுச்செல்லும் தெரு வியாபாரிகள் போல், தங்கள் செய்தித்தாள்களைக் கூவிக்கூவி விற்று, விளம்பரப்படுத்தினர். முன்பிருந்த நாடகக் கொட்டகைகளும், ஓபரா மையங்களும் உற்சாகக் கூச்சல்களையும், வில்லன்களின் கர்ஜனைகளையும் வெளியில் கேட்கும்படி எழுப்பிவந்தன. கிராமப்புறங்களில் கூட, விவசாயிகள் தங்கள் உடல்வலியை மறக்க உரக்கப் பாடினார்கள். இப்போது அவர்கள் பாடுவதே இல்லை. இந்த இந்த நாவீன உலகில் அப்படிப்பட்ட சப்த இரைச்சல்கள், முந்தைய நூற்றாண்டுகளில் இருந்ததுபோல் இல்லை என்றாலும், அமைதி கோலோச்ச வேண்டிய இடத்தை, இப்போது கவனச் சிதறல்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. வாழ்வெனும் வானம் முழுக்க, அமைதி நிரம்பியிருப்பதற்குப் பதிலாக, மனிதர்களின் எண்ணச் சிதறல்களும், எண்ணக் குப்பைகளுமே இடையறாது நிரம்பியுள்ளன. அத்துடன், இது இன்னொரு பெரிய ஆபத்தையும் கொண்டுவந்துள்ளது. அதாவது, இந்த எண்ணக் குப்பை, பைன் வனத்தின் பரப்புகளையும், அகண்டு கிடக்கும் பாலைவனப் பரப்புகளையும், மனிதர்கள் காலிசெய்துவிட்டுப் போன வெற்று அறைகளிலும் கூட, நீக்கமற நிறைந்துள்ளன. இந்த எண்ணக் குப்பை, வரவேற்கத் தக்கதாக இல்லாமல், மனித மனதை உருக்குலைத்து, சோகத்தை உண்டாக்க வல்லதாக உள்ளது. இப்போது மனிதர்களைப் பயம் கவ்விக்கொண்டுள்ளது. மனிதக் காதுகள் இப்போதெல்லாம் தீயின் சடசடப்பையும், கானகப் பறவைகளின் கூச்சல்களையும் அல்லது இலைகள் காற்றிலாடி எழுப்பும் மெல்லிய ஓசைகளையும் கேட்டு, எண்ணக் குப்பைகள் மனங்களில் உண்டாக்கியுள்ள அறியப்படாத வெறுமையிலிருந்து மீள்வதற்கு உதவுகின்றன. மக்கள் அமைதிக்காக ஏங்குகிறார்கள், ஆனால், அவர்களுக்கு அது போதுமான அளவு கிடைப்பதில்லை. | Entry #22315 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
21 | 4 x4 | 2 x2 | 1 x1 |
- 1 user entered 9 "like" tags
- 1 user agreed with "likes" (1 total agree)
- 1 user disagreed with "likes" (2 total disagrees)
-1 1 இடைவிடாது கக்கிக்கொண்டே இருக்கும் | Flows well | wcruz | |
-1 1 அதீதமாகச் சோர்வடைந்து போய், அதற்கு எதிரான திசைகளில் பயணிக்க ஆரம்பித்துள்ளது | Flows well | wcruz | |
காற்று நிரப்பப்பட்ட | Good term selection | wcruz No agrees/disagrees | |
கற்சாலைகளின் | Good term selection | wcruz No agrees/disagrees | |
இப்போது மொபைல் ஃபோன்களில் தஞ்சமடைந்து கிடக்கும் மனிதர்கள், முன்பு பேசிப் பேசியே இரைச்சல் போட்டுக்கொண்டிருந்தனர் | Flows well | wcruz No agrees/disagrees | |
ற்சாகக் கூச்சல்களையும், வில்லன்களின் கர்ஜனைகளையும் | Flows well Though 'villain' is not available in the original, it sounds good here. | wcruz No agrees/disagrees | |
கோலோச்ச | Good term selection | wcruz No agrees/disagrees | |
நீக்கமற நிறைந்துள்ளன. | Good term selection good translation for 'invade'. | wcruz No agrees/disagrees | |
+1 தீயின் சடசடப்பையும், கானகப் பறவைகளின் கூச்சல்களையும் அல்லது இலைகள் காற்றிலாடி எழுப்பும் மெல்லிய ஓசைகளையும் கேட்டு | Flows well | wcruz | |
- 1 user entered 11 "dislike" tags
- 1 user agreed with "dislikes" (6 total agrees)
இந்த நவீன உலகில் | Omission As far as the flow is concerned, this is acceptable. However, this is only age, so the equivalent of 'developed world' is missing. | wcruz No agrees/disagrees | |
உள்ள அமைதி முகாமில் தங்கியிருப்பதாகவும், | Omission 'writes' is missing. Also the source has only 'refuge' but the translator has 'peace refuge'. | wcruz No agrees/disagrees | |
இப்போது சற்று குறைந்துள்ளதாக | Mistranslations The point of the source is that the noise level is at the same level, it has not increased. | wcruz No agrees/disagrees | |
| Inconsistencies 'bus' has been translated as 'பேருந்து’ in paragraph 1. | wcruz | |
செய்தித்தாள் போடுபவர்கள் | Mistranslations Why is 'eave their wares in a mute pile' not translated? | wcruz No agrees/disagrees | |
+1 1 நாவீன | Spelling just a typo | wcruz | |
மனிதர்களின் எண்ணச் சிதறல்களும், எண்ணக் குப்பைகளுமே இடையறாது நிரம்பியுள்ளன. | Other where is it in the source? | wcruz No agrees/disagrees | |
+1 1 பெரிய ஆபத்தையும் | Mistranslations 'Paradox' is not 'ஆபத்து’. | wcruz | |
+1 1 இந்த எண்ணக் குப்பை | Mistranslations There is nothing here to suggest 'distractions' specifically as 'எண்ணக் குப்பை’. It sounds more of an exegesis. | wcruz | |
+1 1 வனத்தின் | Other ’வனம்’ is correct as a translation, but, personally, I would have preferred 'காடு’. | wcruz | |
+1 1 மனிதர்கள் காலிசெய்துவிட்டுப் | Omission 'suddenly' is missing. | wcruz | |
| மக்கள் சத்தமில்லாத சூழலை விரும்புகிறார்கள் ஆனால் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக வளர்ச்சி பெற்ற நாடுகளில், அதிகம் பேசப்படும் ஒரு விஷயம். போக்குவரத்தின் பேரரவம், ஓயாமல் ஒலிக்கும் தொலைபேசிச் சிணுங்கல்கள், பேருந்துகளிலும், ரயில்களிலும் இயந்திரமயமாய் ஒலிக்கும் அறிவிப்புகள், ஆளில்லாத அலுவலகங்களிலும் அலறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆகியவை நம் கவனத்தைச் சிதைக்கும் செயலில் முடிவின்றி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மனித இனம் சத்தத்தினால் சோர்வடைந்து போய் அதற்கு எதிரான விஷயத்துக்காக ஏங்குகிறது - திறந்த வெளி, பரந்த கடல் அல்லது அமைதி, மனம் ஒருமித்த நிலை ஆகியவற்றை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஓய்விடங்கள் என்று. அலைன் கார்பின் என்ற சரித்திரப் பேராசிரியர் சார்பானில் உள்ள அவரது ஓய்விடத்திலிருந்து கொண்டு எழுதுகிறார். எர்லிங் காகே என்ற நார்வே நாட்டு ஆய்வாளர் அன்டார்டிகாவில் அவர் கழித்த நாட்களின் நினைவுகளிலிருந்து எழுத்கிறார். இருவருமே தங்கள் சூழலிலிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்கள். ஆயினும், முன்பு இருந்ததை விட இப்போது ஒன்றும் சத்தம் அதிகமாகி விட்டதாகத் தெரியவில்லை என்று தனது "விஞ்ஞானத்தின் வரலாறு" என்ற நூலில் திரு கார்பின் சுட்டிக்காட்டுகிறார். காற்றடைக்கப்பட்ட டயர்கள் பழக்கத்துக்கு வரும் முன், நகர சாலைகளில் உலோகப்பட்டைகள் கொண்ட சக்கரங்கள் உருளும் சத்தமும், லாடங்கள் கற்களின் மீது உராயும் சத்தமும் மிகுந்திருக்கும். கைபேசிகள் மக்களைத் தனிமைப்படச் செய்வதற்கு முன், பேருந்துகளும், ரயில்களும் உரையாடல்களின் ஒலிகளால் நிரம்பியிருக்கும். செய்தித்தாள்களை விற்றவர்கள் அவற்றை அடுக்கி வைத்து விட்டு மௌனமாக இருக்கவில்லை. உச்ச குரலில் அவற்றை விளம்பரம் செய்தார்கள் - செர்ரிப் பழங்கள், வயலட் பூக்கள், மீன்கள் ஆகியவற்றை விற்பவர்கள் ஆகியோரைப் போலவே. நாடகக் கொட்டகைகளும், இசை நாட்டிய அரங்குகளும் கைதட்டல்கள், கூச்சல்கள் ஆகியவற்றால் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தன. கிராமப்புறங்களில் கூட, உழவர்கள் வேலை செய்ய்ம்போது பாடிக்கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் அவர்கள் பாடுவதில்லை. சத்தத்தின் அளவு மாறவில்லை. முந்தைய நூற்றாண்டுகளிலும் இதைப் பற்றிக் குறை சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் கவனச் சிதைவு அதிகமாகியிருக்கிறது. இதன் இடத்தை அமைதியால் ஊடுருவ முடியும். விந்தை என்னவென்றால், ஒரு பைன் மரக்காட்டுக்குள்ளேயோ, ஒரு வெறுமையான பாலைவனத்திலோ, அல்லது திடீரென்று எல்லோருமே வெளியேறி விட்ட ஒரு அறையிலோ மௌனம் ஊடுருவும்போது, அது வரவேற்கத்தக்கதாக இல்லாமல் , அச்சமூட்டுவதாக இருக்கிறது. அச்சம் மெல்ல நுழைகிறது: என்னவென்று தெரியாத ஒரு வெறுமையிலிருந்து தன்னைக் காக்கும் ஏதோ ஒரு ஓசையுடன் - அது தீயின் மூச்சோ, பறவையின் அழைப்போ அல்லது இலைகளின் சலசலப்போ எதுவாக இருந்தாலும் - காது தன்னை இணைத்துக் கொள்கிறது மனிதர்கள் அமைதியை விரும்புகிறார்கள், ஆனால் அத்தனை அமைதியை அல்ல. | Entry #22838 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
20 | 3 x4 | 3 x2 | 2 x1 |
- 1 user entered 2 "like" tags
- 1 user agreed with "likes" (2 total agrees)
- 1 user entered 4 "dislike" tags
கழித்த நாட்களின் நினைவுகளிலிருந்து | Omission Where is 'Wastes'? | wcruz No agrees/disagrees | |
எழுத்கிறார் | Spelling typo | wcruz No agrees/disagrees | |
விஞ்ஞானத்தின் | Mistranslations Not 'science' but 'silence' | wcruz No agrees/disagrees | |
செய்ய்ம்போது | Spelling செய்யும்போது is correct. This only a typo. | wcruz No agrees/disagrees | |
| குறைந்தபட்சம் அபிவிருத்தியடைந்த உலகில், காலத்தின் கருப்பொருளாகக் காணப்படும் ஒரு விடயம் யாதெனில், மக்கள் அமைதிக்காக ஏங்கிக் கொண்டும், அதனை எதிலும் காண முடியாதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்தின் உறுமல்கள், தொலைபேசிகளின் முடிவற்ற உரத்த ஒலி, பேரூந்துகள் மற்றும் இரயில் வண்டிகளிலான இலக்கமுறை அறிவிப்புக்கள், வெற்று அலுவலகங்களில் கூட அலறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆகியன ஒரு முடிவற்ற சங்கிலித் தொடராகவும், மற்றும் கவனக் கலைப்பான்களாகவும் காணப்படுகின்றன. மனித இனம் சத்தத்தினால் தன்னையே அதி களைப்படையச் செய்து, அதற்கு நேர் எதிரினை காடுகளிலும், பரந்து விரிந்த சமுத்திரத்திலும் அன்றேல் நிசப்தம் மற்றும் மனச்சாந்திக்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சில ஏகாந்த வெளிகளிலும் யாசித்துக் கொண்டிருக்கிறது. வரலாற்றுப் பேராசிரியர் ஒருவரான அலேன் கோர்பின், சோர்போனில் தனது புகலிடம் பற்றியும், மற்றும் ஒரு நோர்வே ஆராய்ச்சியாளரான ஏர்லிங் காகெ, அண்டார்டிக்காவின் கழிவுகள் பற்றிய அவரது நினைவுகள் தொடர்பாகவும் எழுதுகையில், இருவரும் தப்பித்துச் செல்லவே முயன்றிருக்கின்றார்கள். இருந்த போதிலும், திரு கோர்பின் "அமைதியின் ஒரு வரலாறு" என்பதில் சுட்டிக் காட்டுவதைப் போன்று, அங்கு வழமையாகக் காணப்பட்ட சத்தத்தினை விட, மேலதிகமான எந்தச் சத்தமும் அநேகமாக இல்லாதிருக்கலாம். வாயு அமுக்க மூலமான வாகனச் சக்கரங்களின் வருகைக்கு முன்னர், நகர்த் தெருக்கள் கல்லில் உலோக-விளிம்புகள் கொண்ட சக்கரங்கள் மற்றும் குதிரை லாடங்கள் ஆகியவை உரசுகையில் உண்டாகும் காது செவிடு படும்படியான டிங்-டாங் சத்தத்தினால் நிரம்பியிருந்தன. கையடக்கத் தொலைபேசிகளில் தம்மைத் தாமாகத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு முன்னர், பேரூந்துகள் மற்றும் இரயில்கள் உரையாடல்களால் கணீரென உரக்க ஒலித்துக் கொண்டிருந்தன. செய்தித்தாள்-விற்பனையாளர்கள் தங்களது விற்பனைப் பொருட்களை ஒரு ஊமைக் கட்டாக விட்டுவிடவில்லை. செரிப்பழ, வண்ண ஊதாப்பூ, மற்றும் கடல் மீன் ஆகியவற்றைக் கூவி விற்கும் வியாபாரிகளைப் போன்றே, உச்சஸ்தாயியில் சத்தமிட்டு விளம்பரப்படுத்தினர். நாடக மற்றும் கூத்துக் கொட்டகைகள் மகிழ்ச்சி ஆரவாரங்களாலும் மற்றும் பலத்த கைதட்டல்களாலும் அல்லோல கல்லோலப்பட்டன. கிராமப்புறங்களில் கூட, விவசாயிகள் தாம் கடின வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாடினார்கள். அவர்கள் இப்போது பாடுவதில்லை. மாறி விட்டது எதுவெனில், முந்திய நூற்றாண்டுகள் கூட புகார் செய்து கொண்டிருந்த சத்தத்தின் அளவு அன்றி, அண்ட சராசரத்தினை நிசப்தம் ஊடுருவி அதனை ஆக்கிரமிப்புச் செய்து விடலாம் என்ற நிலை நோக்கிய திசை திரும்பலின் அளவு ஆகும். மற்றொரு முரண்பாடு அங்கு பூதாகாரமாய்த் உருவெடுக்கின்றது. ஏனெனில், அவ்வாறு அது அத்துமீறி நுழைகின்றபோது - ஊசிமரக் காட்டின் ஆழத்தில், மொட்டையாகத் தெரியும் பாலைவனத்தில், திடீரென்று வெறுமையாகிப் போனதோர் அறையினுள் - அது வரவேற்பைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக அச்சத்தில் உறையச் செய்து விடுகின்றது. திகில் திருட்டுத்தனமாக உட்புகுந்து விடுகின்றது; காது இயல்பாகவே, அது நெருப்பின் உஷ் என்ற சத்தமாக இருக்கட்டும், பறவையின் அழைப்பாக இருக்கட்டும் அல்லது இலைகளின் சந்தடியின்றிய உரசலாக இருக்கட்டும், அது எதுவாக இருப்பினும் இந்த அறியப்படாத வெறுமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுமுகமாக அதில் ஒட்டிக் கொள்கின்றது. மக்கள் அமைதியை விரும்புகிறார்கள், ஆனால் அது இந்தளவுக்கு அன்று. | Entry #23590 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
15 | 2 x4 | 2 x2 | 3 x1 |
- 1 user entered 9 "like" tags
அதனை எதிலும் காண முடியாதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். | Flows well | wcruz No agrees/disagrees | |
உறுமல்கள் | Good term selection | wcruz No agrees/disagrees | |
கலைப்பான்களாகவும் | Good term selection It is creatively coined, I believe. | wcruz No agrees/disagrees | |
காது செவிடு படும்படியான டிங்-டாங் | Flows well | wcruz No agrees/disagrees | |
கையடக்கத் தொலைபேசி | Good term selection | wcruz No agrees/disagrees | |
கடல் மீன் | Good term selection | wcruz No agrees/disagrees | |
அல்லோல கல்லோலப்பட்டன | Flows well | wcruz No agrees/disagrees | |
ஊசிமரக் காட்டின் | Good term selection | wcruz No agrees/disagrees | |
உஷ் என்ற சத்தமாக | Good term selection | wcruz No agrees/disagrees | |
- 1 user entered 8 "dislike" tags
அபிவிருத்தியடைந்த | Other sound archaic. However, probably in Sri Lankan Tamil this may be word in use. | wcruz No agrees/disagrees | |
பேரூந்துகள் | Spelling Is it long 'u' in Sri Lankan Tamil for பேருந்து? | wcruz No agrees/disagrees | |
இலக்கமுறை | Other transliterating 'digital' would have been better. | wcruz No agrees/disagrees | |
கழிவுகள் | Mistranslations 'wastes' here mean 'barren, large, uninhabited land'. | wcruz No agrees/disagrees | |
வழமையாகக் | Spelling 'used to be' refers to 'past' and not 'usual' I think. | wcruz No agrees/disagrees | |
தம்மைத் தாமாகத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு | Other Though the source does not mention 'people' leaving it out in Tamil sounds odd. | wcruz No agrees/disagrees | |
ஊமைக் கட்டாக | Mistranslations too literal | wcruz No agrees/disagrees | |
திசை திரும்பலின் அளவு ஆகும் | Mistranslations May not be correct way to express 'distraction'. | wcruz No agrees/disagrees | |
| அரவமின்மையை மக்கள் தேடுவதும் ஆனால் அதில் வெற்றியடையாமல் தவிப்பதும் இந்த நவீனக்காலத்தின் ஒரு மையக்கருத்தாக உள்ளது – குறைந்தப்பட்சம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்தத் தேடல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. வாகனங்கள் எழுப்பும் பேரொலி, அலைபேசிகளின் இடைவிடாத எச்சரிக்கை ஒலி, பேருந்துகளிலும் தொடர்வண்டியிலும் எண்ணியல் இயந்திர அறிவிப்புகள், ஆளற்ற அலுவலகங்களில் அலறும் தொலைக்காட்சி – இவை அனைத்தும் வரம்பில்லா வெறுப்பொலி மற்றும் கவனச்சிதைவுக்கான முக்கியக் குறியீடுகள். இந்த இரைச்சல்களால் அயர்ந்துப் போன மானுடம் அதன் எதிர்மறையைத் தேடுவதில் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது – காடுகளின் அமைதி, ஆரவாரமற்ற பெருங்கடல்களின் சாந்தி அல்லது தன் மனத்தை ஒருமுகப்படுத்தி அமைதியை தரும் ஓய்விடங்கள் என நீளுகிறது இந்தப் பயணம். சொர்பான்னில் உள்ள தனது புகலிடத்திலிருந்து வரலாறு பேராசிரியர் அலைன் கோர்பினும், நார்வே நாட்டைச் சேர்ந்த ஆய்வுப்பயணி எர்லிங் காக்கேவும் தாங்கள் அமைதி தேடி சென்ற அண்டார்டிக்கா கண்டத்தின் வன்பாலை நிலத்தை விவரிக்கிறார்கள். ஆனாலும் “அரவமின்மையின் வரலாறு” என்ற புத்தகத்தில் திரு. கோர்பின் சுட்டிக்காட்டுவது போல் முன்பிருந்த சத்தங்களின் அளவு தற்சமயத்தைவிட ஒன்றும் குறைந்து இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. ரப்பர் டயர்கள் வருவதற்கு முன், நகரத் தெருக்கள் காற்றைக் கிழித்துச் செவிடாக்கும் உலோக சக்கரங்கள் மற்றும் குதிரை லாடங்கள் இவற்றின் ஒலிகளையே எதிரொலித்தன. அலைபேசிகள் நம்மைத் தனிமைப்படுத்துவதற்கு முன், பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் நமது உரையாடல்களின் சத்தம் எதிரொலித்ததும் உண்மையே. செய்தித்தாள் விற்பவரும் குவிந்து கிடக்கும் செய்தித்தாள்களையும் அப்படியே விடுவதில்லை, தன் குரல் உயர்த்தி விற்பனையும் செய்கிறார் –பூப்பழம் விற்பவரும் மீன் விற்பவரும் கூட இப்படிப்பட்ட இரைச்சலான சூழ்நிலையை மேலும் வலிமைப்படுத்தினர். அவ்வளவு ஏன், நாடகம் மற்றும் இசை மேடைகளிலும் கூட மக்கள் எழுப்பும் ஆராவர ஓசைகளும் மேலோங்கியே நிற்கின்றன. உழவர்களும் கூடத் தங்கள் கடுந்தொழிலின் களைப்பைப் போக்க உரக்க பாடியே வேலை செய்தனர். ஆனால் அவர்கள் இப்பொழுது பாடுவதில்லை. இதனால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், சென்ற நூற்றாண்டிலும் மக்கள் புகார் செய்த சத்தங்களின் அளவு மாறவில்லை. முன்பு இருந்த அரவமில்லாத சூழலை ஆக்கிரமித்து இருந்த இடத்தை இப்பொழுது அதிகரித்துள்ள கவனச்சிதைவு ஆக்கிரமத்து விட்டது என்பதே உண்மை. ஆனால் அரவமில்லாத சூழலிலும் ஒரு முரண்பாடை நான் காணலாம் – தேவதாரு காடுகளின் உள்ளே, அகண்டு விரிந்த பாலைவனத்தில், சட்டென்று காலி செய்யப்படும் அறையில் – இந்த இடங்களில் எல்லாம் அரவமின்மையை நாம் வரவேற்பதைவிட அது ஏற்படுத்தும் ஒரு பயத்தையே எதிர்கொள்ள எத்தனிக்கிறோம். நெருப்பின் ஒலியாகட்டும், பறவைகளின் கூக்குரலாகட்டும் அல்லது இலைகள் அசையும் ஓசையாகட்டும் – இவையெல்லாம் நம் காதுகள் உண்ணிப்பாகக் கேட்டு நாம் இந்த வெறுமையை ஆட்கொள்ள உதவுகின்றன. மனிதர்கள் அரவமின்மையை விரும்புகிறார்கள், ஆனால் அளவுக்கு அதிகமாக அல்ல. | Entry #24139 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
15 | 2 x4 | 3 x2 | 1 x1 |
- 1 user entered 10 "like" tags
அரவமின்மையை | Good term selection It is attractive to begin the translation like this. | wcruz No agrees/disagrees | |
அலைபேசிகளின் | Good term selection | wcruz No agrees/disagrees | |
அயர்ந்துப் போன மானுடம் | Flows well | wcruz No agrees/disagrees | |
அமைதி | Good term selection At least three words have been used for 'peace' but they provide variety to the reading. | wcruz No agrees/disagrees | |
லாடங்கள் | Good term selection | wcruz No agrees/disagrees | |
முரண்பாடை | Good term selection correct translation of 'paradox'. | wcruz No agrees/disagrees | |
தேவதாரு காடுகளின் | Other Though not many would understand or prefer it, I personally like it. | wcruz No agrees/disagrees | |
சட்டென்று | Good term selection | wcruz No agrees/disagrees | |
ஓசையாகட்டும் | Good term selection | wcruz No agrees/disagrees | |
உண்ணிப்பாகக் | Good term selection | wcruz No agrees/disagrees | |
- 1 user entered 10 "dislike" tags
குறைந்தப்பட்சம் வளர்ச்சியடைந்த நாடுகளில் | Mistranslations For 'developed world', 'குறைந்தப்பட்சம்’ in not needed. | wcruz No agrees/disagrees | |
எண்ணியல் | Other Transliterating 'digital' would have been better. | wcruz No agrees/disagrees | |
புகலிடத்திலிருந்து | Other 'புகலிடம்’ is correct for 'refuge' but sounds odd here. | wcruz No agrees/disagrees | |
வரலாறு | Spelling Shouldn't it be வரலாற்றுப் பேராசிரியர் or would it mean a 'historian'? | wcruz No agrees/disagrees | |
வன்பாலை | Other too literal | wcruz No agrees/disagrees | |
சத்தங்களின் அளவு தற்சமயத்தைவிட ஒன்றும் குறைந்து இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. | Other Nothing wrong with the translation, but has an uninteresting style. | wcruz No agrees/disagrees | |
வலிமைப்படுத்தினர் | Mistranslations unnecessary here. | wcruz No agrees/disagrees | |
நிற்கின்றன | Grammar errors It should be in past tense. | wcruz No agrees/disagrees | |
சென்ற நூற்றாண்டிலும் மக்கள் புகார் செய்த சத்தங்களின் அளவு மாறவில்லை | Grammar errors 'centuries' is in plural. The present translation is ambiguous. | wcruz No agrees/disagrees | |
நெருப்பின் | Mistranslations ’தீ’ would have been better. | wcruz No agrees/disagrees | |
| வளர்ச்சியடைந்த உலகத்திலாவது குறைந்த பட்சம், மக்கள் அமைதிக்காக ஏங்கினாலும், அது கிடைக்காமல் இருப்பது, காலத்தின் கருத்து. போக்குவரத்தின் உறுமல், தொலை பேசிகளின் இடைவிடாத பீப்கள், பேருந்துகளிலும், ரயில் வண்டிகளிலும் மின்னணு அறிவிப்புகள், ஆளற்ற அலுவகங்களில் கூட தொலைக்காட்சிகள் காது குடைய முழங்கல் ஆகியன முடிவற்ற தொடர்ந்த கவனச்சிதறல்கள். இரைச்சலால் மனித இனம் சோர்வடைந்து கொண்டிருப்பதனால் அமைதியை விழைகிறது – அது காடுகளிலாகட்டும், விரிந்து பரந்த சமுத்திரத்திலாகட்டும் அல்லது அசைவின்மைக்கும் ஒருமுகசிந்தனைக்கும் ஏற்ற ஒதுங்கிடங்களிலாகட்டும். இந்த பிரச்சினைகளிலிருந்து தப்ப முயன்ற சரித்திர ஆசிரியரான அலைன் கார்பின் ஸோர்ப்போனின் அவருடைய புகலிடத்திலிருந்து எழுதுகிறார் மற்றும் நார்வேஜிய ஆராய்ச்சியாளரான எர்லிங் கக்கே அண்டார்டிகாவின் கழிவுகளின் நினைவுகளிலிருந்து எழுதுகிறார். இருப்பினும், திரு. கார்பின் தன்னுடைய "A History of Silence"ல் (அமைதியின் சரித்திரம்) குறிப்பிடுவது போல், இது வரை இருந்த இரைச்சலை விட அநேகமாக இரைச்சல் இல்லை. காற்றடைக்கப்பட்ட வண்டிச் சக்கரங்கள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன், நகர வீதிகள் தோறும் காதைச் செவிடாக்கும் உலோகப்பட்டைகள் பொருந்திய சக்கரங்களின் இரைச்சலும், கற்களின் மீது ஏற்படும் குதிரை இலாட ஒலியும் பரவி இருந்தன. நன்கு கேட்க, கை பேசிகளுடன் ஒதுங்கும் முன், பேருந்துகளிலும், ரயில் வண்டிகளிலும் சம்பாஷணைகளின் பேரிரைச்சல் தாங்கமுடியாது. செர்ரி பழங்கள், ஊதா நிறப்பூக்கள் மற்றும் புத்தம் புதிய மேகெரெல் மீன் விற்பவர்கள் போன்று தினசரி விற்பவர்களும் சளைக்காமல் வரையற்ற கூச்சலுடன் தங்கள் பொருட்களை விற்றார்கள். அரங்கங்களும் இசை நாடகங்களும் சந்தோஷ ஆரவாரங்களுடனும் குறுக்கீட்டுக் கூச்சல்களுடனும்ம் நிரம்பி இருந்தன. கிராமப்புறங்களிலும் கூட உழவர்கள் தங்கள் உழைப்பின் ஊடே பாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் இப்போது பாடுவதில்லை. முந்தைய நூற்றாண்டுகளில் குறை பட்டது போல மாற்றம் இரைச்சலின் அளவில் அவ்வளவு இல்லை ஆனால் அமைதியின் இடத்தில் இருக்கும் கவனச்சிதறலின் அளவில் தான். மற்றுமொரு முரண்பாடு – அமைதி கவனச்சிதறலின் இடத்தை ஆக்கிரமிக்கும்போது – பைன் மரக்காட்டின் உள்ளே, வெற்றுப் பாலைவனத்திலே, திடீரென்று காலி செய்யப்பட்ட அறையின் உள்ளே – வரவேற்பை விட அந்த அமைதி எப்போதும் பயமூட்டுவதாக அமைகிறது. பயம் ஊறுகிறது; காது உள்ளுணர்வுடன் தன்னை எதனுடனும் இணைத்துக் கொள்ளுகிறது இந்த வெறுமையிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள – அது ஜ்வாலையின் மெல்லிய ‘உஸ்’ ஒலியாகட்டும், பறவையின் குரலாகட்டும், இலைகளின் சலசலப்பாகட்டும். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் ஆனால் அந்த அளவு மரண அமைதியை அல்ல. | Entry #22561 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
10 | 1 x4 | 1 x2 | 4 x1 |
| | | | | X Sign in to your ProZ.com account... | | | | | | ProZ.com translation contestsProZ.com translation contests offer a fun way to take a break from your normal routine while testing and honing your skills with fellow translators.
ProZ.com Translation Contests. Patent pending. |